அரசு மருத்துவக்கல்லூரியில் வகுப்புகள் தொடங்கியது


அரசு மருத்துவக்கல்லூரியில் வகுப்புகள் தொடங்கியது
x
தினத்தந்தி 14 Feb 2022 7:17 PM IST (Updated: 14 Feb 2022 7:17 PM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவக்கல்லூரியில் வகுப்புகள் தொடங்கியது

ிருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது. அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டில் தேர்வானவர்கள், சிறப்பு ஒதுக்கீட்டில் கீழ் வருபவர்கள், கவுன்சிலிங்கில் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தவர்கள் என 37 மாணவ-மாணவிகள் நேற்று காலை கல்லூரிக்கு வந்தனர். வகுப்பறை ஒன்றில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். மருத்துவ கல்லூரி துணை முதல்வர் பொறுப்புஅப்துல்ரகுமான் வரவேற்றார். மருத்துவ கல்லூரி டீன் முருகேசன் பேசும்போது ஒவ்வொருவரும் கேள்விகேட்க பழகுங்கள். கேள்வி கேட்டால் தான் குழப்பமும், சந்தேகமும் தீரும். உங்களுக்கான பதிலும் தீர்வும் கிடைக்கும். அரசு மருத்துவ கல்லூரியில் நீங்கள் படிக்க பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி முன்னேறுங்கள். மருத்துவம் சார்ந்த கல்வி, செய்முறை பயிற்சி உள்ளிட்டவை பேராசிரியர் குழு மூலம் வழங்கப்படும்என்றார்.

Next Story