ரூ50 லட்சம் நிலம் மீட்பு
ரூ50 லட்சம் நிலம் மீட்பு
தாராபுரம் தாலுகா கன்னிவாடி கிராமம் காத்தசாமிபாளையத்தில் கன்னிமார் கருப்பண்ணசாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் சேனாபதிபாளையம் கிராமத்தில் 2.85 ஏக்கர் புன்செய் நிலமாக உள்ளது. திருப்பூர் இணை ஆணையர் நடராஜன் உத்தரவின் படி, நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டபோது மேற்படி நிலத்தை கதிரேசன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். ஆய்வின் போது சம்பந்தப்பட்ட நிலத்தை ஒப்படைக்கும்படியும், இல்லையென்றால் இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவின் கீழ் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கதிரேசன் தாமாகவே முன்வந்து 2.85 ஏக்கர் நிலத்தை கோவிலுக்கு ஒப்படைப்பதாக எழுதிக் கொடுத்தார். அதன் அடிப்படையில் நேற்று சம்பந்தப்பட்ட நிலத்தை கையகப்படுத்தி கோவில் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
Related Tags :
Next Story