மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலி
x
தினத்தந்தி 14 Feb 2022 7:36 PM IST (Updated: 14 Feb 2022 7:36 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பரிதாபமாக பலியானார்

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பரிதாபமாக பலியானார்.
டிரைவர்
கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலை சேர்ந்த இருளாண்டி மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 30). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி யிலிருந்து இளையரசனேந்தலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஊருக்கு அருகிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே நடந்து வந்து கொண்டிருந்த வெங்கடாசலபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் மோகன் ராஜ் (வயது 41) என்பவர் மீது திடீரென்று மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்தில் பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நவநீத கிருஷ்ணன் சாலையில் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். மோட்டார் சைக்கிள் மோதியதில் மோகன்ராஜூவும் பலத்த காயமடைந்தார்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நவநீத கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
மேலும் காயமடைந்த மோகன்ராஜூவையும் போலீசார் மீட்டு  கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story