மருத்துவ பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்க மருத்துவ பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 2 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்க மருத்துவ பொருட்கள் பேக்கிங் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒரு வாக்குச்சாவடிக்கு தலா 2 சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
406 வாக்குச்சாவடிகள்
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் முழுபாதுகாப்பு கவச உடை அணிந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக நீலகிரியில் அனைத்து முன்னேற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்கான மருத்துவ உபகரணங்கள் சுகாதாரத்துறை மூலம் ஊட்டி பிரிக்ஸ் பள்ளி அரங்குக்கு வரவழைக்கப்பட்டது.
மருத்துவ பொருட்கள்
அங்கு பணியாளர்கள் வாக்குச்சாவடி வாரியாக மருத்துவ பொருட்களை பிரித்து அட்டை பெட்டிகளில் அடுக்கி வைத்து பேக்கிங் செய்து வருகின்றனர். ஒரு வாக்குச் சாவடியில் தெர்மல் ஸ்கேனர், 500 மில்லி லிட்டர் கிருமிநாசினி 6 பாட்டில்கள், முகக்கவசம், முகமூடி, ரப்பர் கையுறை, குப்பைவாளி, முழு பாதுகாப்பு கவசஉடை உள்பட 10 பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்ய ஒரு பணியாளர், கிருமிநாசினி வழங்க ஒரு பணியாளர் என 2 பேர் பணியில் ஈடுபடுகின்றனர்.
406 வாக்குச்சாவடிகளில் தலா 2 பேர் என சுகாதார பணியாளர்கள் 812 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
முன்னேற்பாடுகள்
வாக்குச்சாவடிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும், மருத்துவ பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தற்போது பேக்கிங் செய்யப்பட்டு உள்ள மருத்துவ பொருட்கள் முதலில் 15 உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.
அதன் பின்னர் தேர்தலுக்கு முந்தைய நாள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மருத்துவ பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story