ஜெடையலிங்கா சுவாமி கோவில் குண்டம் திருவிழா
கோத்தகிரி அருகே ஜக்கனாரை கிராமத்தில் உள்ள ஜெடையலிங்கா சுவாமி கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே ஜக்கனாரை கிராமத்தில் உள்ள ஜெடையலிங்கா சுவாமி கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
ஜெடையலிங்கா சுவாமி கோவில்
கோத்தகிரி அரவேனு அருகே உள்ள ஜக்கனாரை கிராமத்தில் ஜெடைய லிங்கா சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் குண்டம் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் சுற்றுவட்டார 8 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்பது வழக்கம்.
குண்டம் திருவிழாவுக்கு விறகை பயன்படுத்த கடந்த நவம்பர் மாதத்தில் ஜக்கனாரை ஊர்ப்பிரமுகர்கள் ஜெடையலிங்க சுவாமி கோவிலுக்கு சென்று, வளாகத்தில் வளர்ந்து இருந்த நகா மரத்தை வெட்டி, பூக்குண்டத்திற்கு பயன்படுத்த காய வைத்துவிட்டு வந்தனர்.
குண்டம் திருவிழா
பின்னர் குண்டம் இறங்க கோவில் பூசாரி உள்பட பக்தர்கள் பலர் விரதம் இருந்தனர். தொடர்ந்து குண்டம் திருவிழா நடத்த கடவுளின் அனுமதி பெற்று கிராமத்தில் உள்ள தெவ்வமனை ஹிரியோடையா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கடந்த புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை 8 ஊர்களுக்கு சாமி வீதியாக உலா சென்று வீடு, வீடாக பூஜைகள் செய்யப்பட்டன. திருவிழா வின் முக்கிய நாளான நேற்று ஜெடையலிங்கா சுவாமி கோவில் மற்றும் அதன் அருகே உள்ள ரங்கநாதர் கோவிலுக்கு விரதம் இருந்து வந்த பக்தர்கள் சென்று சிறப்பு பூஜை செய்தனர்.
தீ மிதித்தனர்
தொடர்ந்து குண்டம் இறங்க அமைக்கப்பட்ட இடத்தில் நகா மரத்தின் விறகுகளை போட்டு தயார் செய்தனர். தீ மூட்ட தீப்பெட்டி பயன்படுத்து வது இ்ல்லை மாறாக குரும்பர் இன மக்கள் கோவிலுக்கு வந்து, கற்களை உரசி நெருப்பை மூட்டி குண்டத்தை தயார் செய்தனர்.
பின்னர் குரும்பர் இன மக்கள் தங்களது பாரம்பரிய இசை கருவிகளை வாசித்து பூஜைகள் செய்தனர். இதனைத் தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு குண்டம் இறங்க பக்தர்கள் தயாராக இருந்தனர்.
அப்போது சீதோஷ்ண நிலை மாறி பலத்த காற்று வீசினால் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி கிடைக்கும் என்று காத்திருந்தனர். அப்போது காற்று வீசியது. இதையடுத்து முதலில் பூசாரியும், தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்களும் குண்டத்தில் தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவு செய்தனர். மேலும் இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.
Related Tags :
Next Story