பெண் வனக்காவலரை கொன்றது ஏன்?


பெண் வனக்காவலரை கொன்றது ஏன்?
x
தினத்தந்தி 14 Feb 2022 9:09 PM IST (Updated: 14 Feb 2022 9:09 PM IST)
t-max-icont-min-icon

போடியில் பெண் வனக்காவலரை கொன்றது ஏன்? என்று கைதான போலீஸ்காரர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

போடி: 


போலீஸ்காரர் வாக்குமூலம் 
தேனி மாவட்டம் போடியில் நேற்று முன்தினம் வனக்காவலரான சரண்யா (வயது 27) கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மதுரை அனுப்பானடியை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் திருமுருகன் (25) மதுரை கீரைத்துறை போலீசில் சரண் அடைந்தார். தகவலறிந்த போடி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சரண்யாவின் உடலை கைப்பற்றினர். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து திருமுருகனை கைது செய்து மதுரையில் இருந்து போடி நகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 
நான் கடந்த 2019-ம் ஆண்டு மதுரையில் உள்ள தனியார் போலீஸ் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தேன். அங்கு மதுரையை சேர்ந்த சரண்யாவும் பயிற்சி பெற்றார். பயிற்சியின்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. 

வனக்காவலர் 
அப்போது சரண்யா தனது கணவர் விபத்தில் இறந்துவிட்டதாகவும், 2 மகள்கள் உள்ளனர் என்றும் கூறினார். நான்  2019-ம்  ஆண்டு   போலீஸ் வேலைக்கு சேர்ந் தேன். ஆனால் சரண்யாவுக்கு வேலை கிடைக்கவில்லை. அவருக்கு 2020-ம் ஆண்டு வனத்துறையில் வேலை கிடைத்தது. அவர் தேனி வனத்துறை அலுவலகத்தில் வனக்காவலராக வேலை பார்த்தார். இதனால் போடியில் வீடு வாடகைக்கு எடுத்து சரண்யா தனியாக வசித்து வந்தார். 

இதற்கிடையே எனக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. எனது திருமணத்துக்கு பின்னரும், சரண்யாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன். இதனால் அடிக்கடி போடி சென்று அவரை சந்தித்து வந்தேன். இந்த விஷயம் எனது மனைவிக்கு தெரியவந்தது. அவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். 

திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை
இதனால் நான் சரண்யாவின் அம்மாவிடம் சென்று எங்கள் திருமணம் குறித்து பேசினேன். அப்போது திருமணத்திற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.  
இதையடுத்து சரண்யாவிடம் திருமணம் செய்து கொள்வோம் என்று வற்புறுத்தினேன். நாம் திருமணம் செய்து கொண்டால், தனது மகள்களும், தாயும் விஷம் குடித்து இறந்துவிடுவோம் என்று சொல்வதாக கூறினார். இதனால் சரண்யா தொடர்ந்து திருமணத்துக்கு சம்மதிக்காமல் இருந்தார். இந்நிலையில் கடந்த 11-ந்தேதி போடிக்கு சென்று அவரிடம் திருமணம் செய்ய வற்புறுத்தினேன். சரண்யா சம்மதிக்காததால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். 
இவ்வாறு வாக்குமூலத்தில் திருமுருகன் கூறியிருந்தார். 

Next Story