பாரம்பரிய மல்லர் கம்பத்தில் மாணவர்கள் சாகசம்
பாரம்பரிய மல்லர் கம்பத்தில் மாணவர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம் மாணவர்களின் சாகசம் நிக்கோலஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி முருகன் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு மல்லர் கம்பம் நிர்வாகிகள் செயலாளர் செந்தில் குமார், கூடுதல் செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் ராமச்சந்திரன் மற்றும் மாநில பயிற்சியாளர் மல்லன் ஆதித்தன் ஆகியோர் சாகசத்தை தொடங்கி வைத்தனர். மாணவர்கள் மல்லர் கம்பத்திலும், மாணவிகள் மல்லர் கயிற்றில் சாகசம் செய்தனர்.அகாடமியின் நிறுவனர் மேத்யு இம்மானுவேல், சிலம்பு ஆசான் மற்றும் விக்னேஷ் குமார் நன்றி கூறினர்.
Related Tags :
Next Story