கோவில் உண்டியல் திருட்டு


கோவில் உண்டியல் திருட்டு
x
தினத்தந்தி 14 Feb 2022 9:43 PM IST (Updated: 14 Feb 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியல் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ளது சாத்தான்குளம். இந்த ஊர் தர்மமுனீஸ்வரர் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தினை திருடிச்சென்றுவிட்டனர். நேற்று முன்தினம் காலையில் கோவிலை திறக்க வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பூசாரி மலைராஜ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்க்காரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். கோவில் உண்டியலில் ரூ.3 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

Next Story