நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கடலூர் மாவட்டம் முழுவதும் 1,800 போலீசார் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு தகவல்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கடலூர் மாவட்டம் முழுவதும் 1,800 போலீசார் பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 14 Feb 2022 10:15 PM IST (Updated: 14 Feb 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டம் முழுவதும் 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 57 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.


கடலூர்,

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

410 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

கடலூர் மாவட்டத்தில் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்காக 726 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 129 இடங்களில் உள்ள 410 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் கடலூர் மாநகராட்சியில் 152 வாக்குச்சாவடிகளில் 80 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறிந்துள்ளோம்.


இந்த பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கண் காணிப்பு கேமரா, வீடியோ பதிவு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். இதுவரை தேர்தல் நடத்தை விதிமீறல், கொரோனா விதிமுறைகளை மீறுதல் என 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கண்காணித்து, தேவைப்பட்டால் அவர்களை கைது செய்தும் வருகிறோம்.

நடமாடும் குழுக்கள்

மாவட்டம் முழுவதும் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.15 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தேர்தலுக்காக மாவட்டம் முழுவதும் 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள னர். 7 உட்கோட்டத்தில் உள்ள 46 போலீஸ் நிலையங்களில் 24 போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே தேர்தல் நடக்கிறது.

 200 போலீசார் வெளி மாவட்ட தேர்தலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
400 ஊர்க்காவல் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு செல்லுதல், வாக்கு எண்ணும் வரை 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 57 நட மாடும் குழுக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.

பேட்டியின் போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விஜிகுமார், கரிகால்பாரிசங்கர், தனிப்பிரிவு ஆய்வாளர் செந்தில்விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story