தாலியுடன் வந்த இந்து முன்னணியினர்
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை பகுதிக்கு காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க தாலியுடன் இந்து முன்னணியினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் நேற்று காதலர் தினத்தையொட்டி ஏராளமான காதல் ஜோடிகள் வந்து குவிந்தனர். பள்ளி சீருடையில் வந்த சில மாணவ, மாணவிகளை போலீசார் பூங்கா நுழைவாயிலில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இந்து முன்னணியின் தேனி மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் ஒன்றிய தலைவர் கனகராஜ், நகர தலைவர் கருப்பையா மற்றும் நிர்வாகிகள் வைகை அணை பகுதிக்கு வந்தனர். அவர்கள் மாலை, தாலி மற்றும் தேங்காய், பழத்துடன் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க வைகை அணை பூங்கா பகுதியில் உலா வந்தனர். இவர்களை கண்ட காதல் ஜோடியினர் ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story