சூளகிரி அருகே பரிதாபம்: தண்ணீர் என நினைத்து மண்எண்ணெயை குடித்த மூதாட்டி சாவு
சூளகிரி அருகே தண்ணீர் என நினைத்து மண்எண்ணெயை குடித்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
ஓசூர்:
மூதாட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கொண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவருடைய மனைவி ராமக்காள் (வயது 76). இவருக்கு, வயது மூப்பின் காரணமாக கண்பார்வை குறைபாடு இருந்ததாக தெரிகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் தொடர்ந்து வாந்தி எடுத்து வந்துள்ளார்.
இதை கவனித்த குடும்பத்தினர், அவரிடம் என்ன பிரச்சினை என கேட்டுள்ளனர். அதற்கு அந்த மூதாட்டி, தண்ணீர் என நினைத்து மண்எண்ணெயை குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பரிதாப சாவு
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமக்காள் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story