கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்


கள்ளக்குறிச்சி அருகே  தச்சூர் வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Feb 2022 10:31 PM IST (Updated: 14 Feb 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் வாக்கு எண்ணும் மையத்தில் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

கண்டாச்சிமங்கலம்

நர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து வேட்பாளர்கள், கட்சி பிரமுகர்கள் தீவிர ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார்கள். 
தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் சங்கராபுரம் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் உள்ள பாரதி கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்புகள் அமைக்கும் பணி

இங்கு கீழ்தளத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையமும், மேல்தளத்தில் சங்கராபுரம் பேரூராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மையமும் உள்ளன. இதில் வாக்கு எண்ணிக்கை அறை, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பு அறை, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வந்து செல்வதற்கான வழித்தடம் ஆகியவற்றில் தடுப்புகள் அமைக்கும் பணி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Next Story