நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா


நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 Feb 2022 10:35 PM IST (Updated: 14 Feb 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
51 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 67 ஆயிரத்து 632 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது.
இதனால் இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 67,634 ஆக அதிகரித்தது. இதற்கிடையே நேற்று புதிதாக 51 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 685 ஆக அதிகரித்து உள்ளது.
1112 பேருக்கு சிகிச்சை
இந்த நிலையில் நேற்று இந்த மாவட்டத்தில் 217 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 66 ஆயிரத்து 40 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 533 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 1,112 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தாலும், நோய் பரவலை தடுக்கும் வகையில் வெளியில் செல்லும் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story