கள்ளக்குறிச்சி அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கள்ளக்குறிச்சி அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மங்கள வாத்தியம், மஹாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவநாயகர் ஹோமம் மற்றும் தீபாராதனையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கும்ப அலங்காரம், கணபதி வழிபாடு, முதற்கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று மூலவர் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் வெகுவிமாிசையாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் சாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலுஆறுமுகம் மற்றும் சென்னை, சேலம், ஓசூர் பெங்களூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story