தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு


தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2022 10:54 PM IST (Updated: 14 Feb 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யத்தில், தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மத்திய- மாநில அரசுகள் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேதாரண்யம்;
வேதாரண்யத்தில், தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மத்திய- மாநில அரசுகள் தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   
உப்பு உற்பத்தி
வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடிநெல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்ததாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-ம் இடம் வகிக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முடிந்து பாத்திகளில் தேங்கி இருந்த தண்ணீரை வெளியேற்றி உப்பு உற்பத்தி தாடங்கியது. உப்பள பாத்திகளில் தரிசு வேலை தொடங்கப்பட்டு உப்பு உற்பத்திக்கு தயாரான நிலையில் மீண்டும் பெய்த தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. 
ஒரு மாதம்
கடந்த 3 நாட்களாக திடீரென்று பெய்த கனமழையால் உப்பு பாத்திகளில் மீண்டும் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கான பணிகள் 3 முறை தொடங்கி  நடைபெற்ற நிலையில் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. 
 தற்போது உப்பு எடுக்கும் தருவாயில் இருந்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் உப்பு பாத்திகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. பாத்திகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க ஒரு மாத காலம் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
உப்பு உற்பத்தி செய்ய ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரத்துக்கு  மேல் செலவான நிலையில் மழை பாதிப்பால் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே உப்பு உற்பத்தியாளர்களுக்கும் உப்பள தொழிலாளர்களுக்கும்  மத்திய- மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story