மகாெலட்சுமி சாய்பாபா கோவில் குடமுழுக்கு


மகாெலட்சுமி சாய்பாபா கோவில் குடமுழுக்கு
x
தினத்தந்தி 14 Feb 2022 11:10 PM IST (Updated: 14 Feb 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

மகாெலட்சுமி சாய்பாபா கோவில் குடமுழுக்கு

வெளிப்பாளையம்;
நாகை காடம்பாடி மகாலெட்சுமி நகரில் உள்ள சத்குரு மகாலெட்சுமி சாய்பாபா கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கடந்த 12-ம் தேதி  விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. கடந்த 13-ந்  தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 4-ம் கால பூஜை பூர்ணாகுதியுடன் முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விமானத்தில் உள்ள கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து சாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் மகாலெட்சுமி சாய்பாபாவுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கந்த பரம்பரை மகாலிங்க தேசிக பரமாச்சாரியா சாமி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story