விற்பனைக்காக குவிந்துள்ள தர்பூசணி பழங்கள்
சீசனுக்கு முன்பே தங்கச்சிமடம் பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிந்துள்ளன.
ராமேசுவரம்,
சீசனுக்கு முன்பே தங்கச்சிமடம் பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிந்துள்ளன.
கோடை கால சீசன்
கோடை கால சீசன் தொடங்க இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் சீசனுக்கு முன்னதாகவே தர்பூசணி பழங்கள் விற் பனைக்காக வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்டு குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள தர்பூசணி பழங்களை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர்.
இதுபற்றி தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக தர்பூசணிபழ வியாபாரம் செய்து வரும் கண்ணன் கூறியதாவது:- இந்த ஆண்டு தர்பூசணி பழங்களின் விலை அதிகமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் புதுக்கோட்டை,தஞ்சாவூர் உள்ளிட்ட அந்த பகுதிகளில் தர்பூசணி இந்த ஆண்டு மிகவும் குறைவாகவே பயிரிடப்பட்டு உள்ளது.
விலை அதிகம்
அதனால் தர்பூசணி பழங்களின் வரத்து குறைவாக உள்ளதால் விலையும் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story