தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நொய்யல்
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் குழுவினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு மனுக்கள் மீதான பரிசீலனை மற்றும் வாபஸ் பெறுவது முடிவுற்று வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. இதனால் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் நிலையான பறக்கும் படை அலுவலர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் புஞ்சை தோட்டக்குறிச்சி மற்றும் புகழூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல்வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் காகித ஆலை மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள், சரக்கு ஆட்டோக்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களையும் ஓரமாக நிறுத்தி ஒவ்வொரு வாகனங்களிலும் பணம், நகை மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்கிறார்களா? என தீவிர சோதனை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story