வினாத்தாள் வெளியானதால் பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் வந்தவாசி பள்ளிகளில் ஆய்வு
திருப்புதல் தேர்வு வினாத்தாள் ெவளியான விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பொன்குமார் நேற்று வந்தவாசி பள்ளிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வந்தவாசி
திருப்புதல் தேர்வு வினாத்தாள் ெவளியான விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் பொன்குமார் நேற்று வந்தவாசி பள்ளிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வினாத்தாள்கள் வெளியாயின
தமிழகத்தில் தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி நேற்று 10-ம் வகுப்புக்கு அறிவியல் தேர்வும், 12-ம் வகுப்புக்கு கணித தேர்வும் நடக்க இருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கல்வி மாவட்ட பகுதியில் தேர்வுக்கு முன்ேப நேற்று முன்தினம் வினாத்தாள்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருட்செல்வம் பொன்னூர் போலீசில் புகார் செய்தார்.
நேரில் ஆய்வு
இந்த நிலையில்,, தமிழக பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பொன்குமார் நேற்று வந்தவாசிக்கு நேரில் வந்து, அங்குள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி, அரசு பள்ளி என 4 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் விசாரித்த போது, திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே அச்சடிக்கப்பட்டதாகவும், தனியார் பள்ளியை சேர்ந்த யாரோ சிலர் இந்த வினாத்தாள்களை தேர்வுக்கு முன்பே வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.
போளூர்
இதேபோல போளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியிலும் வினாத்தாள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story