வாக்கு எண்ணும் மையத்தில் உதவி கலெக்டர் ஆய்வு


வாக்கு எண்ணும் மையத்தில் உதவி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Feb 2022 11:52 PM IST (Updated: 14 Feb 2022 11:52 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் வாக்கு எண்ணும் மையத்தில் உதவி கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மன்னார்குடி:
மன்னார்குடி நகராட்சியில் உள்ள 33 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 142 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.வாக்காளர்கள் வாக்களிக்க 62 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற  22-ந் தேதி எண்ணப்படுகிறது.  வாக்கு எண்ணும் மையம் அரசு உதவி பெறும் பின்லே மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 16 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணும் மையத்தில்  மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதா?, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்தர், தேர்தல் நடத்தும் அலுவலரும் மன்னார்குடி நகராட்சி ஆணையருமான சென்னுகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story