விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Feb 2022 12:01 AM IST (Updated: 15 Feb 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே நீலனூரை சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 67). விவசாயி.  இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்துள்ளது. இதற்கு இவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். நோய் குணமாகாததால், மனவேதனை அடைந்த சுந்தரராஜ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை உறவினர்கள மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி சுந்தரராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story