ஆம்பூர் அருகே வெறிநாய் கடித்து 2 சிறுவர்கள் காயம்
ஆம்பூர் அருகே வெறிநாய் கடித்து 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த கைலாசகிரி ஊராட்சியில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பெண்கள், சிறுவர், சிறுமிகள் விளையாடவும், சாலைகளில் நடமாடவும் அச்சப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள 2 சிறுவர்களை அங்கு சுற்றித் திரிந்த ஒரு வெறிநாய் திடீரென துரத்தியது. இதனால் அவர்கள் தப்பி ஓடினர். ஆனால் அந்த நாய் விடாமல் துரத்தி சென்று இருவரையும் கடித்துள்ளது. இதில் காயமடைந்த சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ‘‘இந்த பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவு உள்ளது. இவற்றில் பெரும்பாலான நாய்கள் அவ்வழியாக செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க அகற்ற வேண்டும’’் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story