சூரக்காடு பாலம் அருகில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்


சூரக்காடு பாலம் அருகில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்
x
தினத்தந்தி 15 Feb 2022 12:09 AM IST (Updated: 15 Feb 2022 12:09 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே சூரக்காடு பாலம் அருகில் கோழிக்கழிவுகள் அதிக அளவு கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சீர்காழி;
சீர்காழி அருகே சூரக்காடு பாலம் அருகில் கோழிக்கழிவுகள் அதிக அளவு கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். 
சூரக்காடு பாலம் 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் காரைமேடு ஊராட்சிக்குட்பட்ட நாகப்பட்டினம், பூம்புகார் செல்லும் நெடுஞ்சாலையில் சூரக்காடு பாலம் உள்ளது. இந்த பாலத்தை கடந்து தான் நாகப்பட்டினம், பூம்புகார், திருவெண்காடு, வானகிரி, அல்லிவிளாகம், காத்திருப்பு, நாங்கூர், அண்ணன் பெருமாள் கோவில், மங்கைமடம், மேலையூர் உள்ளிட்ட ஏராளமான ஊர்களுக்கு செல்ல வேண்டும். 
கோழிக்கழிவுகள்
இந்த பாலம் அருகில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வரும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாலத்தை கடக்கும் போது  கடுமையான துர்நாற்றம் வீசுவதால் முகம் சுழிக்கும் நிலையில் இருந்து வருகின்றன. சட்டவிரோதமாக கொட்டப்படும் கோழி இறைச்சி உள்ளிட்ட கழிவுகளை உண்ண வரும் பன்றிகள் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பாலம் அருகில் கோழிக்கழிவுகள்  கொட்டப்படுவதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேலும் பாலம் அருகில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றி சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story