அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்


அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
x
தினத்தந்தி 15 Feb 2022 12:14 AM IST (Updated: 15 Feb 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் இருந்து அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு 2 ஆயிரம் டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி நீடாமங்கலம், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மற்றும் தெற்கு நத்தம், இடையர்நத்தம், அசேஷம், மூவாநல்லூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்த வெளி சேமிப்பு மையங்கள் ஆகிய இடங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 58 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் தர்மபுரிக்கு புறப்பட்டு சென்றது.

Next Story