தோல்வி பயத்தால் அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை-முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு
தோல்வி பயத்தால் தான் அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
தேவகோட்டை,
தோல்வி பயத்தால் தான் அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
ப.சிதம்பரம் பிரசாரம்
தேவகோட்டை பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவியேற்கும் அரசு அதன் பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் மட்டுமே மக்களின் அடிப்படை பிரச்சினைகளை அந்த அரசு தீர்க்க முடியும். ஆனால் கடந்த முறை பதவியேற்ற அ.தி.மு.க அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வந்தது. அதற்கு காரணம் அப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தோற்க வேண்டிய நிலை வரும் என்ற பயத்துடன் அரசியல் சாசனத்தை மீறி தேர்தலை நடத்தவில்லை. அவ்வாறு பயந்து தேர்தலை புறக்கணித்த அ.தி.மு.க. தற்போது உள்ளாட்சி தேர்தலில் நிற்பது வேடிக்கையாக உள்ளது.
தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் கடந்த 8 மாதங்களாக தமிழகத்திற்கு எந்த ஒரு பணியையும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூறி வருகின்றனர். அவர்கள் தினசரி பத்திரிகைகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
வெற்று பேச்சு
தற்போது அ.தி.மு.க.வினர் வெறும் வெற்றுப்பேச்சை பேசி வருகின்றனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மதவாதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாங்குடி எம்.எல்.ஏ., தி.மு.க மாவட்ட துணைச்செயலாளர் ஜோன்ஸ்ரூசோ, நகர செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர், புதுவயல் பகுதியில் தி.மு.க, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.
Related Tags :
Next Story