ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
ஸ்ரீரங்கம், பிப்.15-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
இது குறித்து ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆக்கிரமிப்பு முயற்சி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் நிர்வாகத்துடன் இணைந்த கத்ரி தயாராம் சிவ்ஜி அறக்கட்டளைக்குச் சொந்தமான 58 சென்ட் காலிநிலம், ஸ்ரீரங்கம் சிங்கர் கோவிலுக்கு கிழக்கில் உள்ளது.
இந்த இடத்தை ஆக்கிரமிக்க சிலர் அவ்வப்போது முயற்சித்து வந்தனர். இதையடுத்து அங்கு கோவிலுக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, கம்பி வேலியும் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் இரவு அந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு பைப்புகள் கொண்டு அங்கு நிரந்தர செட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர்.
புகார் மனு
இதுகுறித்து தகவலறிந்த கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, சட்ட ஆலோசகர் வக்கீல் சீனிவாசன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் அங்குசென்று ஆக்கிரமிப்பாளர்களை எச்சரித்து வெளியேற்றினர்.
பின்னர் உடனடியாக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த கட்டுமானங்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து ஆக்கிரமிப்பு முயற்சி செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், எதிர்காலத்தில் மீண்டும் அவ்விடத்தை யாரும் ஆக்கிரமிக்காதவாறு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மாநகர போலீஸ் கமிஷனருக்கும் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
ரூ.10 கோடி மதிப்பு
திருவானைக்காவல் டிரங்ரோடுக்கு அருகில் உள்ள அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Tags :
Next Story