தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 15 Feb 2022 1:13 AM IST (Updated: 15 Feb 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேதமடைந்த மின்கம்பம்
மதுரை மாவட்டம் மேற்கு நாகமலைபுதுக்கோட்டை எம்.ஜி.ஆர்.காலனியில் உள்ள மின்கம்பத்தில்  சிமெண்டு காரைகள் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை கவனித்து சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
கவிதா, நாகமலைபுதுக்கோட்டை.
நாய்கள் தொல்லை
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உளுத்திமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றது. பகலில் கூட்டமாக தெருவில் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றது. இரவில் வாகன ஓட்டிகளை துரத்தி கடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பிரியா, உளுத்திமடை.
சுகாதார சீர்கேடு
மதுரை மாவட்டம் பழைய நத்தம் ரோடு 47-வது வார்டு பஸ் நிறுத்தம் அருகே குப்பைகள் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனிப்பார்களா?
முரளிதரன், மதுரை.
கால்நடைகள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கால்நடைகள் அதிக அளவில் சாலைகளில் சுற்றித்திரிகின்றது. இதனால் இப்பகுதியை கடந்து செல்ல பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்தி அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
பொதுமக்கள், மானாமதுரை.
பழுதடைந்த சாலை
திருமங்கலம் ஆலம்பட்டி கிராமத்திலிருந்து ராயபாளையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் சிறு, சிறு விபத்தில் சிக்கி சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
விக்டர், திருமங்கலம்.
போக்குவரத்து நெரிசல்
மதுரை காக்காதோப்பு ரெயில் நிலையம் பின்புறம் உள்ள தெரு குறுகியதாக உள்ளது. இதனால் இந்த தெருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே இப்பகுதியை கடந்து செல்ல அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இ்ப்பகுதி சாலையை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவஹரிஸ், காக்காதோப்பு.
தொற்றுநோய் பரவும் அபாயம் 
மதுரை மாவட்டம் எழுமலை பகுதியில் குப்பைகள் சாலையின் ஓரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்து குப்பைகளை சரியான முறையில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேஷ்பிரபு, எழுமலை.

Next Story