சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்


சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்
x
தினத்தந்தி 15 Feb 2022 1:39 AM IST (Updated: 15 Feb 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி எதிரே சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி எதிரே சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்  
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட ஆனையன்குளம் சாலை ஓரத்தில் அரசு ஆஸ்பத்திரி எதிரே தினந்தோறும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது.இந்த இடத்தில் பெரிய குளம் இருந்தது. தற்போது தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் குளம் முற்றிலும் தூர்ந்து போய் காட்சி அளிக்கிறது. 
மத்திய, மாநில அரசுகள் குப்பைகளை உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்திற்கான தனியாக கட்டிடம் கட்டப்பட்டு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது குப்பைகள் மற்றும் கோழி, ஆடு உள்ளிட்டவைகளின் கழிவுகள், தினந்தோறும் இந்த குளத்தின் ஓரத்தில் கொட்டப்படுகிறது. 
பொதுமக்கள் கடும் அவதி
இதனால் சாலையோரம் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தற்போது அந்த பகுதியே குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.  இந்த பகுதியின் வழியே அரசு ஆஸ்பத்திரி, பெருமாள் கோவில், மசூதிகள், கல்லூரி பள்ளிகள் அமைந்து உள்ளன. கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் நோயாளிகள், பக்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் அவ்வழியாக செல்லும் பொழுது துர்நாற்றம் வீசுவதாலும் மூக்கை பிடித்தவாறே செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குப்பை கொட்டுவதை முற்றிலும் நிறுத்தவும், குப்பைகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Next Story