தஞ்சை பெரிய கோவிலுக்கு தாலி கயிறுடன் வந்த இந்து மக்கள் கட்சியினர்
காதலர் தினத்தையொட்டி காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று இந்து மக்கள் கட்சியினர் தாலி கயிறுடன் வந்தனர்.
தஞ்சாவூர்:
காதலர் தினத்தையொட்டி காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று இந்து மக்கள் கட்சியினர் தாலி கயிறுடன் வந்தனர்.
தாலி கயிறுடன் வந்த இந்து மக்கள் கட்சியினர்
காதலர் தினத்தையொட்டி சுற்றுலா தலமான தஞ்சை பெரிய கோவிலுக்கு காதலர்கள் வந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என இந்து மக்கள் கட்சியினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ் தலைமையில் வக்கீல் சுகுமார் மற்றும் நிர்வாகிகள் சந்தோஷ், முகேஷ், கோபால், சபரி மற்றும் நிர்வாகிகள் தாலி கயிறுடன் தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்தனர்.
காதலர்களை விரட்டி விட்டனர்
இந்த நிலையில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் பெரிய கோவில் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பெரிய கோவிலுக்கு வரும் காதலர்களை நுழைவு வாயில் முன்பே போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை வெளியே அனுப்பி வைத்தனர். குடும்பத்தோடு சுற்றுலா வந்தவர்கள், தனியாக வந்தவர்களை மட்டுமே கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதித்தனர். போலீசார் விரட்டுவதை அறிந்த காதல் ஜோடியினர் தனித்தனியாக கோவிலுக்கு சென்றனர். ஒரு சில காதல் ஜோடிகள் பின்பக்கம் வழியாகவும் கோவிலுக்குள் சென்றனர்.
கலைந்து சென்றனர்
இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் ்போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கோவிலில் இருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story