2 காரில் கொண்டு சென்ற ரூ.1½ லட்சம் பறிமுதல்


2 காரில் கொண்டு சென்ற ரூ.1½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Feb 2022 1:57 AM IST (Updated: 15 Feb 2022 1:57 AM IST)
t-max-icont-min-icon

2 காரில் கொண்டு சென்ற ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில்:
2 காரில் கொண்டு சென்ற ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 
குமரி மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகளை தடுக்க 75 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது.
அதன்படி நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கணேசபுரம் பகுதியில் அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.83,500 இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பளுகல் பகுதியில் அதிகாரிகள் ரோந்து சென்றபோது, காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.63,740 பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி முதல் பறக்கும் படை குழுக்களால் மொத்தம் ரூ.42 லட்சத்து 50 ஆயிரத்து 910 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
---


Next Story