வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரம்


வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 15 Feb 2022 2:12 AM IST (Updated: 15 Feb 2022 2:12 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சியில் வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

சேலம்:-
சேலம் மாநகராட்சியில் வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி மாநகர பகுதியில் 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 84 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்தநிலையில், சேலம் கோட்டை பல்நோக்கு அரங்கில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மருத்துவ உபகரணங்கள்
அப்போது, அங்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக 709 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வெப்பமானி, சானிடைசர், முககவசம்,  கையுறைகள், முழு கவச உடைகள், வாக்காளர்களுக்கான கையுறைகள், பஞ்சு மற்றும் குப்பை வாளிகள் உள்பட பாதுகாப்பு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு தயார் நிலையில் உள்ளதை பார்வையிட்டனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும், வாக்குச்சாவடி பொருட்கள் அனுப்பி வைக்கும் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உண்டான பொருட்களையும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும், இந்த பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.
இதையடுத்து வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், எந்த பொருட்களும் விடுபடாமல் சரி பார்த்து அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும், அனைத்து பொருட்களும் வரிசைப்படி சரியாக உள்ளதா? என்பது குறித்தும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.
தபால் வாக்கு பெட்டிகள்
மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள தபால் வாக்குபெட்டிகளையும் அவர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகர என்ஜினீயர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி ஆணையாளர் சாந்தி, உதவி வருவாய் அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story