முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்


முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்
x
தினத்தந்தி 15 Feb 2022 2:30 AM IST (Updated: 15 Feb 2022 2:30 AM IST)
t-max-icont-min-icon

முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

மதுரை
மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று காலை தொடங்கியது. அனுமதி கடிதத்துடன் வந்த மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டது. அதன்பின்னர், அவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அந்த மாணவர்களை, 2, 3-ம் ஆண்டு மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து முதலாமாண்டு மாணவ, மாணவிகள் வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டு வகுப்புகள் நடந்தன.
இதுகுறித்து, மதுரை அரசு மருத்துவ கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி கூறுகையில், “மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மொத்தம் 250 இடங்கள் உள்ளன.
 தமிழக அரசின், 7.5 உள் இடஒதுக்கீட்டில் மதுரை மருத்துவ கல்லூரியை 16 மாணவர்கள் தேர்வு செய்திருந்தனர். அந்த மாணவர்கள் உள்பட 177 பேர் நேற்று மதுரை மருத்துவ கல்லூரியில் இணைந்தனர். மீதமுள்ளவர்களும் வரும் நாட்களில் சேர்ந்து விடுவார்கள். மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே வகுப்புக்குள் அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு, ஆசிரியர்கள் நேரடி வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்றார். 

Next Story