வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பெங்களூருவில் விவசாயிகள் போராட்டம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பெங்களூருவில் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2022 2:35 AM IST (Updated: 15 Feb 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பெங்களூருவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்ததுடன், தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.

பெங்களூரு: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பெங்களூருவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்ததுடன், தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.

வேளாண் சட்டங்கள்

மத்திய அரசு புதிதாக வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

அதன்படி, மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் வேளாண் சட்டங்களை அரசு இன்னும் திரும்ப பெறவில்லை. பெலகாவியில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போதே வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலுயுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

விவசாயிகள் பேரணி

இதையடுத்து, கர்நாடகத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றுவலியுறுத்தி நேற்று பெங்களூரு சங்கொள்ளி ராயண்ணா ரெயில் நிலையத்தில் ஏராளமான விவசாயிகள் விதானசவுதாவவை (கர்நாடக சட்டசபை) முற்றகையிட சுதந்திர பூங்கா வழியாக பேரணியாக புறப்பட்டு சென்றார்கள். 

ஆனால் நேற்று கர்நாடக சட்டசபையின் கூட்டுக்கூட்டம் தொடங்கியதால், அங்கு விவசாயிகளை செல்ல விடாமல் சுதந்திரா பூங்காவில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் சுதந்திர பூங்காவில் வைத்து வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தற்போது நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரின் போது வேளாண் சட்டங்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினாா்கள்.

போலீசாருடன் வாக்குவாதம்

முன்னதாக சுதந்திர பூங்காவுக்கு செல்லும் வழியில் ராயண்ணா சர்க்கிளில் வைத்து திடீரென்று சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உண்டானது. உடனே விவசாயிகளை கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர். 

Next Story