தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குப்பைகளை அகற்ற வேண்டும்
கோவளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சிலுவைநகர் திருமண மண்டபம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு குப்பைகளை அகற்றுவதுடன், கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவக்குமார், அகஸ்தீஸ்வரம்.
சீரான குடிநீர் தேவை
மாங்கோடு ஊராட்சியின் 9-வது வார்டுக்கு உட்பட்ட இடையாற்றின்கரை, நெடுங்கோட்டுகுழி, பாகோடு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சத்தியதாஸ், மாங்கோடு.
சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?
தாழக்குடியில் இருந்து நாகர்கோவில்-நெல்லை தேசிய நெடுஞ்சாலைைய இணைக்கும் குறுகிய சாலை உள்ளது. இந்த சாலையை விரிவாக்கம் செய்வதற்காக அளவீடு செய்து தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டது. ஆனால், சில இடங்களில் மட்டும் விரிவாக்கம் செய்யப்பட்டும், பல இடங்களில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் செடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுகிறது. எனவே, சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகலிங்கம்பிள்ளை, தாழக்குடி.
எரியாத மின்விளக்கு
வடக்கு சூரங்குடி விவேகானந்தர் தெருவில் சாலையோரம் எப்1-29 எண் கொண்ட மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள விளக்கு பழுதடைந்து ஒரு மாதமாக எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த விளக்கை மாற்றி புதிய விளக்கு பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண், வடக்கு சூரங்குடி.
சாலையை சீரமைக்க வேண்டும்
பறக்கை ஊராட்சிக்கு உட்பட்ட பறக்கை மீன்கடை தெருவில் இருந்து சுசீந்திரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து தார்சாலை என்பதற்கான அடையாளமே இல்லாத நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நரேஷ், பறக்கை.
தடுப்பு சுவர் தேவை
திக்கணங்கோட்டில் இருந்து குளச்சல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையையொட்டி சேனவம்விளை கால்வாய் செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையில் கால்வாயின் பக்கச்சுவரும், சாலையின் ஒரு பகுதியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி கால்வாயின் பக்கச்சுவரையும், சாலையையும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
-ரா.ராஜன், திக்கணங்கோடு.
குடிநீர் வரவில்லை
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அருள்நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சில இடங்களில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சீரான குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கஜாய், அருள்நகர், நாகர்கோவில்.
Related Tags :
Next Story