தபால் வாக்கு செலுத்துவதற்காக வைக்கப்பட்ட பெட்டி
தபால் வாக்கு செலுத்துவதற்காக பெட்டி வைக்கப்பட்டது.
பெரம்பலூர்:
ஓட்டுப்பதிவு அன்று பணிபுரிபவர்களுக்கு...
பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறும் வருகிற 19-ந் தேதியன்று பணிபுரியவுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் வாக்களிக்க வசதியாக தபால் வாக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தபால் வாக்கு செலுத்த வசதியாக பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திலும், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூராட்சி அலுவலகங்களிலும் ‘சீல்' வைக்கப்பட்ட பெட்டி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ்
மேலும் பெட்டியின் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தபால் வாக்கு கிடைக்க பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு சென்று, அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தலாம். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள போலீசார் தபால் வாக்கினை செலுத்த முகாம் நடத்த மாவட்ட நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வருகிற 18-ந்தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ள பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியில் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை தபால் வாக்கினை செலுத்தலாம். இந்நிலையில் சில அலுவலகங்களில் தபால் வாக்கு கிடைக்கப்பெற்றவர்கள், தங்கள் வாக்குகளை அதற்கான பெட்டியில் செலுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story