திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் இருந்த 14 பவுன் நகை திருட்டு
போரூர் அருகே திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் இருந்த 14 பவுன் நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கம், கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருமால் (வயது 49). நேற்று முன்தினம் கெருகம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இவரது மகளுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மணமகள் அறையில் வைத்து இருந்த 14 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மாங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர், மணமகள் அறைக்குள் புகுந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அதேபோல் மேடவாக்கம், சத்யசாய் நகர் பகுதியை சேர்ந்தவர் அனுராதா (42). நேற்று முன்தினம் தனது உறவினர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போரூர்-குன்றத்தூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு வந்து இருந்தார். அப்போது கையில் வைத்து இருந்த 8 பவுன் நகைகள் இருந்த பையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story