பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு


பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 Feb 2022 5:22 PM IST (Updated: 15 Feb 2022 5:22 PM IST)
t-max-icont-min-icon

பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

தாராபுரம் அருகே பாக்கு தட்டு தயாரிப்பு தொழிற்சிலைக்கு அனுமதி வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாய சங்கம் மாநில தலைவர் ஏ. காளிமுத்து தலைமையில் பொதுமக்கள் ஆர்.டி.ஓ குமரேசனிடம் மனுவில் கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
தாராபுரம் வட்டம், வடுகபாளையம் கிராமத்தில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் பள்ளபட்டி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனம் வடுகபாளையம் கிராமத்தில் தொழிற்சாலை அமைக்கும் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சந்தேகமடைந்த பொதுமக்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டனர் அப்போது இந்த இடத்தில் கேரளாவிலிருந்து பாக்கு மர இலைகளைகளை கொண்டு வந்து பாக்கு தட்டு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துவதாகவும், இதனால் இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று கூடி பாக்கு மட்டை தயாரிப்பு தொழிற்சாலையை தடைசெய்ய வேண்டும்.இல்லையெனில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், குடிநீர் கிணறுகள் பாதிக்கப்படும் என கூறி கடந்த மாதம் 21ந் தேதி 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆர்.டி.ஓவை கண்டித்து நேற்று மீண்டும் அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.மனு கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆ.டி.ஓ விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் காளிமுத்து கூறுகையில், இந்தப் பகுதியில் பாக்கு மட்டை தயாரிக்கும் தொழிற்சாலை துவங்கினால் அந்த மட்டையை ஊறவைக்கும் தண்ணீரின் கழிவுநீர் அதிகமாக நேரடியாக சுத்திகரிக்கப்படாமல் நிலத்தடியில் செல்லும்.அப்போது அப்பகுதியை சுற்றி உள்ள விவசாய கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் மாசு பட வாய்ப்புள்ளது ஆனால் இது குறித்து சம்மந்தப்பட்ட அரசு அதிகளோ, மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகளோ, ஊரக கட்டமைப்பு துறை மற்றும் தொழில் சார்ந்த துறையிடமும் எந்த அனுமதியும் பெறவில்லை, இந்த தொழில்சாலை கட்டுமானம் நிறைவு அடையும் முன்பே தாங்கள் நேரில் ஆய்வு செய்து உடனடியாக இந்த தொழில்சாலையை தடை செய்யுமாறு கடந்த மாதம் 21ந் தேதி மனு கொடுத்தோம் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.இதனால் மீண்டும் வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story