அடிப்படை சுகாதாரப்பணிகள் எதுவுமே செய்வதில்லை
அடிப்படை சுகாதாரப்பணிகள் எதுவுமே செய்வதில்லை
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சியில் உள்ள நாதம்பாளையும், கந்தம்பாளையம், மகாலட்சுமிநகர், வெள்ளியம்பாளையம், சஹானா கார்டன், தாசம்பாளையம், அழகாபுரி நகர், அரசுப்பணியாளர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2ஆயிரம் குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதிகளில் எந்த சுகாதாரப் பணியும் நடப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ஊராட்சி படுதியில் எங்கு திரும்பினாலும் மலைபோல் குப்பைமேடு உள்ளது. ஊராட்சியில் பல பகுதிகளில் சாக்கடை கால்வாய் கிடையாது. இதனால் வருட கணக்கில் ரோட்டில் சாக்கடை நீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதில் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. அவ்வழியே ரோட்டில் நடந்து செல்லமுடியாத நிலை. பல இடங்களில் வீடுகளுக்கு மத்தியில் சாக்கடை நீர் ஆறாய் ஓடுகிறது. வீதி விளக்குகள் எரிவதில்லை. கொசுமருந்து அடிப்பதே கிடையாது. இதனால் மக்களுக்கு அடிக்கடி உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் நேரில் சொல்லியும், பொதுமக்கள் போராட்டம் நடத்தி கோரிக்கை மனு கொடுத்தும் எதற்குமே நடவடிக்கை எடுப்பதில்லை. என்று சரமாரி குற்றம் தெரிவித்துள்ளனர்..
Related Tags :
Next Story