வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது


வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 15 Feb 2022 7:33 PM IST (Updated: 15 Feb 2022 7:33 PM IST)
t-max-icont-min-icon

வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வருகின்ற 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். அவர் விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க அதனை பின்தொடர்ந்து மகளிர் குழுவினர் மற்றும் அரசு அலுவலர்கள் வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் கல்பனா, சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story