நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது மாரப்ப கவுண்டர் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார்


நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது மாரப்ப கவுண்டர் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார்
x
தினத்தந்தி 15 Feb 2022 8:07 PM IST (Updated: 15 Feb 2022 8:07 PM IST)
t-max-icont-min-icon

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது மாரப்ப கவுண்டர் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார்


கோவை

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது மாரப்ப கவுண்டர் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார்.

105 வயது முதியவர்

கோவையை அடுத்த கருப்பராயன்பாளையத்தை சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர் (வயது105) 

இவர், கடந்த 1916-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந் தேதி பிறந்தார். அவரின் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பெற்றோர் ஓலையில் தமிழில் எழுதி வைத்திருந்தனர். 

இதனால் அவரது வயது சரியாக தெரியவந்தது. 

விவசாயியான மாரப்பகவுண்டருக்கு 1 மகன், 3 மகள்கள் மற்றும் அவர்கள் மூலம் பேரன்கள், பேத்திகள் உள்ளனர். 

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1952 முதல் 2021 வரை நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் மாரப்பகவுண்டர் தவறாமல் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி சாதனை படைத்து உள்ளார்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு 19-ந் தேதி நடைபெற உள்ளது. எனவே அந்த தேர்தலிலும் அவர் வாக்களிக்க ஆர்வமாக இருந்தார். 

ஆனால் வயது முதிர்வு காரணமாக மாரப்ப கவுண்டர் நேற்றுமுன்தினம் இரவு திடீரென்று இறந்தார்.

உடல் தகனம்

அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாரப்ப கவுண்டரின் உடல் தகனம் செய்யப்பட்டது.


105 வயது முடிந்து 106-வது வயது பிறக்க இன்னும் 4 மாதங்களே இருந்த நிலையில் மாரப்பகவுண்டர் இறந்து விட்டதாகவும், 

அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்து இளைய சமூகத்தினர் ஜனநாயக கடமையாற்ற உந்துசக்தியாக இருந்தவர் என அந்த பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.


Next Story