தேர் திருவிழாவையொட்டி சக்தி விநாயகர் கோவிலில் கொடியேற்றம்
கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி கொடி ஏற்றப்பட்டது.
கூடலூர்
கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் தேர் திருவிழாவையொட்டி கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றம்
கூடலூரில் பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர தேர்த்திருவிழா தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜையும், 8 மணிக்கு முகூர்த்தக்கால் வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் , தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், 8 மணிக்கு கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர் கோவில் அர்ச்சகர் கார்த்திகேய குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விசேஷ பூஜைகள்
தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பகல் 12 மணி முதல் இரவு வரை பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக சக்தி விநாயகருக்கு வெள்ளி கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) மற்றும் 18-ந் தேதிகளில் காலை முதல் இரவு வரை விசேஷ பூஜைகள் ஹோமங்கள் நடக்கிறது. 19-ந் தேதி காலை 5 மணிக்கு ஹோமங்களும், 9 மணிக்கு வருஷாபிஷேகமும், தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
திருவீதி உலா
5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சக்தி விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். தொடர்ந்து அனைத்து விழா நாட்களில் அரசின் வழிகாட்டுதலின்படி பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story