தூக்குப்போட்டு 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை
திருத்துறைப்பூண்டி அருகே தூக்குப்போட்டு 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே தூக்குப்போட்டு 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பள்ளி மாணவி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி பாரதியார் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. விவசாயி. இவருடைய மனைவி கஸ்தூரி. இவர்களது மகள் சந்தியா(வயது16). சந்தியா பாமணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாாிமுத்து வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி கஸ்தூரி, வெளியில் சென்று இருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சந்தியா தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சந்தியாவை மீட்டனர். அப்போது அவர் உயிரிழந்து இருந்தது தெரியவந்தது.
விசாரணை
இது குறித்து மாரிமுத்து திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தியா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாமணி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story