தேர்தல் பணிக்கு 1,466 தன்னார்வலர்கள் நியமனம்
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்கு 1,466 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றுவதற்கு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், "தேனி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக மகளிர் திட்டத்தின் மூலம், ஒரு வாக்குச்சாவடிக்கு 2 தன்னார்வலர்கள் வீதம் மொத்தம் 1,466 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் முக கவசம் அணிந்து வருவதை உறுதி செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வைப்பது, உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல் ஆகிய பணிகளை இந்த தன்னார்வலர்கள் மேற்கொள்வார்கள். இந்த தன்னார்வலர்கள் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே வாக்குப்பதிவு மையத்துக்கு வர வேண்டும்" என்றார். பின்னர், ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர் முத்துக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story