தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை வாகன சோதனையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை வாகன சோதனையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆறுமுகம், பழனி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தர்மபுரி அருகே நல்லாம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்துமாறு போலீசார் சைகை செய்தனர். இதனால் வேனை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் வேனை சோதனை செய்த போது அதில் ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
ரேஷன் அரிசி பறிமுதல்
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தர்மபுரியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குடிமை பொருள் குற்ற புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story