வடக்கனந்தல் பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆய்வு
வடக்கனந்தல் பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணியை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்
கச்சிராயப்பாளையம்
முன்னேற்பாடு பணி
வடக்கனந்தல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 7 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மீதமுள்ள 11 வார்டுகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதில் 19 ஆயிரத்து 827 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 21 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 14 வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இ்ந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி வடக்கனந்தல் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த பணியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பழனிவேல், ஜெயக்குமார், பெல் நிறுவன பொறியாளர்கள் ஈடுபட்டனர். இதை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான ஸ்ரீதர் ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story