தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கொத்தனார் சாவு 2 பேர் படுகாயம்
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கொத்தனார் சாவு 2 பேர் படுகாயம்
கண்டாச்சிமங்கலம்
உளுந்தூர்பேட்டை அருகே கல் சிறுநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் அஜித்குமார்(வயது 25). கொத்தனாரான இவர் சம்பவத்தன்று இதே பகுதியைச் சார்ந்த தனது நண்பர் அனில்குமார்(23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தியாகதுருகம் அருகே நாகலூரில் அரசு விடுதியில் தங்கி படித்து வந்த தனது தங்கை பார்த்துவிட்டு மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அஜித்குமார் ஓட்டினார். அனில்குமார் பின்னால் அமர்ந்திருந்தார்.
மேல்பூண்டி தக்கா அருகே வந்தபோது எதிரே பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், இவரது மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அஜித்குமார், அனில்குமார், பிரபாகரன் ஆகிய 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அஜித்குமாரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story