கண்காணிப்பு வளையத்திற்குள் வாக்கு எண்ணும் மையம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையம் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையம் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி வளாகம் மற்றும் பரமக்குடி அழகப்பா கலை அறிவியல் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.
இந்த வாக்குகள் அனைத்தும் வருகிற 22-ந் தேதி காலை எண்ணப்பட உள்ளன. இதனையொட்டி மேற்கண்ட 2 வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறைகள், வாக்கு எண்ணும் அறைகள், முகவர்கள், வேட்பாளர்கள் இருக்கும் அறை போன்றவை ஏற்படுத்தப்பட்டு அதில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு முடிந்து வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து வைப்பது முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை மேற்கண்ட வாக்கு எண்ணிக்கை மையங்கள் முழுவதும் 24 மணி நேர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளன.
கண்காணிப்பு கேமராக்கள்
இதற்கேற்ப வாக்குப்பதிவு எண்ணும் மையங்களை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்வதில் எந்த குளறுபடியும் ஏற்படாதவாறு நகரசபை, பேரூராட்சி வழி என தனித்தனியாக பிரித்து அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களை மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் நேரில் பார்வையிட்டு தேவையான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
Related Tags :
Next Story