கர்நாடக அரசை கலைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கர்நாடக அரசை கலைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்
கரூர் மதச்சார்பின்மையை தகர்க்கும் கர்நாடக அரசை கலைக்க வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு மற்றும் சாமானிய மக்கள் நல கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கோவை ரோட்டில் உள்ள ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். சாமானிய மக்கள் நல கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முகம், திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் சண்முகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் சிவா உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். முடிவில் பாக்கியராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story