திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் 144 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தலில் 271 பேர் போட்டியிடுகின்றனர்.
திருவண்ணாமலை நகராட்சிக்கு வாக்கு எண்ணும் மையம் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள டவுன் ஹால் பள்ளியில் அமைய உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளதையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து திருவண்ணாமலை அரசு கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஆரணி
ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. 65 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையம் ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன் வாக்கு எண்ணும் மையத்தினையும், நகரில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய கவர், சீல் முத்திரை, மை, பேனா உள்ளிட்ட பொருட்களை ஒருகிணைக்கும்பணி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. அதனையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆரணி நகராட்சி தேர்தல் பார்வையாளர் முருகன், நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலரான பி. தமிழ்ச்செல்வி, அலுவலக மேலாளர் நெடுமாறன், வருவாய் ஆய்வாளர் மோகன், தேர்தல் பிரிவு அலுவலர் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
செங்கம்
செங்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் கண்காணிப்பாளரும், கோட்டாட்சியருமான வெற்றிவேல் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜீஜாபாய், வட்டாட்சியர் முனுசாமி, தேர்தல் அலுவலர்கள் உமாமகேஸ்வரி, உஷ்ணாபீ, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார், செங்கம் பேரூராட்சி தலைமை எழுத்தர் வினோபா உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story