நாமக்கல், திருச்செங்கோட்டில் ரூ.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல், திருச்செங்கோட்டில் நேற்று நடந்த ஏலத்தில், ரூ.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
நாமக்கல்:
நாமக்கல், திருச்செங்கோட்டில் நேற்று நடந்த ஏலத்தில், ரூ.50 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.
பருத்தி ஏலம்
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று ஏலம் நடந்தது.
இந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 1,500 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர்.
ரூ.46 லட்சத்துக்கு விற்பனை
இந்த பருத்தி மூட்டைகள் ரூ.46 லட்சத்துக்கு விற்பனையானது. ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.9 ஆயிரத்து 869 முதல் ரூ.11 ஆயிரத்து 869 வரையிலும், சுரபி ரக பருத்தி ரூ.10 ஆயிரத்து 269 முதல் ரூ.13 ஆயிரத்து 222 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 99 முதல் ரூ.7 ஆயிரத்து 700 வரையிலும் ஏலம் போனது.
இந்த பருத்தி மூட்டைகளை திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், கொங்கணாபுரம், கோவை, அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்து சென்றனர்.
திருச்செங்கோடு
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பருத்தி பி.டி. ரகம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.9 ஆயிரத்து 479 முதல் ரூ.10 ஆயிரத்து 662 வரையிலும், சுரபி ரகம் குவிண்டாலுக்கு ரூ.9 ஆயிரத்து 879 முதல் ரூ.13 ஆயிரத்து 879 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் 150 மூட்டை பருத்தி, ரூ.4 லட்சத்துக்கு ஏலம் ஆனது.
தொடர்ந்து நடந்த எள் ஏலத்தில் 30 மூட்டை எள் ரூ.1½ லட்சத்துக்கு விற்பனை ஆனது. இதில் கருப்பு எள் கிலோ ரூ.115.90 முதல் ரூ.122 வரையிலும், சிவப்பு எள் கிலோ ரூ.90.90 முதல் ரூ.117.90 வரையிலும் ஏலம் போனது.
Related Tags :
Next Story